Monday, April 16, 2012

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

இது நான் சால விரும்பும் திருக்குறள். இதன் பொருள் ஏற்கனவே கீதை போன்ற பல வேதாந்த நூல்களில் சொல்லப்பட்டது தான். எந்த எந்த பொருட்களை நாம் துறக்கிறோமோ அவற்றிலிருந்து வரும் துன்பங்கள் நம்மை நெருங்கா. பற்றற்று இரு என்பதே உட்பொருள். ஆனால் இந்தக் குறளின் சிறப்பு என்ன? பற்றற்று இரு என்று சொல்லும் இக்குறள் எப்படி பற்றற்று இருப்பது என்பதையும் மறைபொருளாக விளக்குவது தான் இதன் சிறப்பு. 

இந்தக் குறளைக் கூறும் பொழுது உதடுகள் ஒட்டாது. வாய் அசைகிறது, ஓசை வருகிறது ஆனால் உதடுகள் ஒட்டவில்லை. அது போல வாழ்கை நடத்து, காரியங்கள் செய், ஆனால் அவற்றில் பற்று வைத்து ஒட்டிக்கொள்ளாதே என்று அழகாக சொல்லாமல் சொன்னது தான் இதன் சிறப்பு. 

இது ஒன்றும் கடினமானது அல்ல. ப, ம இவ்விரண்டு எழுத்து சம்பந்தப்பட்டவற்றை ஒதுக்கினால் உதடுகள் ஒட்டாது. அதை சரியான இடத்தில உபயோகப் படுத்தியது தான் வான்மறை வள்ளுவனின் சிறப்பு. 

இன்னொன்றும் சொல்லி விடுகிறேன். தமிழில் அருவருப்பாக எழுதவும் , தூற்றவும் தான் முடியும் என்பது போல சிலர் பதிவுகள்  இருக்கின்றன. சுவாரஸ்யமாகவும் எழுதலாம் என்று ஞாபகப் படுத்தவே இந்த பதிவு.
 
Custom Search