Saturday, October 31, 2009

thamizh arivom தமிழ் அறிவோம்

I reproduce some of my posts in orkut regarding தமிழ். posts with the name "narayanan" and without a name are mine.

தமிழ் அறிவோம்


Feb 17
Narayanan

தமிழ் தமிழ் என்று கூவி வியாபாரம் செய்யும் இக்காலத்தில் எது தமிழ், எது தமிழ் இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

ர, ல, ட இந்த எழுத்துகளில் ஆரம்பிப்பது தமிழ்ச்சொல்லே அல்ல.

உதாரணம் ரம்பம், லட்டு , டமாரம் போன்றவை. பெயர்ச்சொற்கள் வந்தாலும் அதன் முன் உயிரெழுத்து சேர்த்து தான் எழுத வேண்டும்.

உதாரணம்: இரவி, இலங்கை, அரங்கன். இது இலக்கணம்.

ஆனால் இன்று தமிழ் தமிழ் என்று உயிர் விடும் எவ்வளவு பேர் இப்படி எழுதுகிறார்கள். அல்லது கொதித்து எழும் இளைஞர்கள் தான் இதை எல்லாம் கண்டு கொள்கிறார்களா? தங்கள் மொழியைப் பற்றிய அறிவே இவர்களுக்கு இல்லை. ஆனால் கொதித்து எழுந்திட மட்டும் தெரியும்.

Feb 17
Narayanan
தமிழ் என்று இன்றைய இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பாதி சொற்களுக்கு மேல் தமிழ் கிடையாது. தமிழ்ச்சொல்லே ஆனாலும் அதைக் கேள்வியே படாத தலைமுறை தான் இன்று உள்ளது. இருக்கட்டும். அது அவர்கள் இஷ்டம். ஆனால் ஒன்றும் தெரியாமல் உணர்ச்சிவசப்பட மட்டும் தெரிந்தால் அவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள்.

சில சொற்களைப் பார்போம். நல்ல பாம்பு. இது தமிழா இல்லையா?

இதில் என்ன சந்தேகம். நல்ல என்பதும் தமிழ் வார்த்தை. பாம்பு என்பதும் தமிழ் வார்த்தை. நல்ல பாம்பு என்பதும் தமிழாகத் தானே இருக்க வேண்டும்.

அது தான் இல்லை.

சரி. அது என்ன நல்ல பாம்பு. அது யாரையும் கடிக்காதா? அல்லது அது கடித்தால் உயிர் போகாதா? யாருக்கு நல்லது அந்த பாம்பு?

நல்ல என்றால் தெலுங்கில் கருப்பு என்று அர்த்தம். நல்ல பாம்பு என்றால் கருப்பு நிறமுள்ள பாம்பு அதாவது கருநாகம் என்று அர்த்தம்.

அதே போல் தான் நல்லெண்ணெய் என்ற சொல்லும். மற்ற எண்ணெய் எல்லாம் கெட்ட எண்ணெய் என்று அர்த்தமா ? எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தால் அது கருநிறத்தில் இருக்கும். அதனால் அது நல்ல எண்ணெய். அதுவே நல்லது என்று பொருள் படும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கப்பட்டு பின் கூட்டு விதியால் நல்லெண்ணய் ஆகிவிட்டது.

மேலும் தமிழ் கற்போம்.

Feb 17
Narayanan
தமிழைப் படுத்தாதீர்கள்!!
தமிழ் என்பதே மிகவும் அழகான வார்த்தை.

த - வல்லினம்
மி- மெல்லினம்
ழ் - இடையினம், என்று தன் பெயரிலேயே மொழியியல் பிரயோகம் கொண்டது.

தமிழ் ரசனையுடன் இருந்தால், அதனை ரசித்து அனுபவிக்கத் தோன்றும்.

தமிழ் வெறியுடன் திரிந்தால், மற்றவர்களை அடிக்கத் தான் தோன்றும்.

பல பிறமொழி வார்த்தைகள் தமிழில் கலந்து தமிழாகிப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. அதை எல்லாம் தமிழ்ப்படுத்துவது என்பது, தமிழைப் படுத்துவது தான்.

டம்ளர் என்பது தமிழ் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். குவளை என்பதே சரியான வார்த்தை. ஆனால் குவளை என்பது எத்தனைப் பேருக்கு புரியும். அதை விட எளிமையான டம்ளர் என்ற சொல்லைப் பயன் படுத்தினால் என்ன குடியா முழுகி விடும். இல்லை என்றால் அதையும் விட எளிமையான கிளாஸ் என்ற தமிழ் வார்த்தையைப் பயன் படுத்தினால் போகிறது.

இது போல், ரசீது, தயார், தயாரிப்பு, தம்புரா, வாத்தியார், லிங்கம், சிவம், ஜன்னல், ஆப்பிள், அதிகாரி, தந்தம், சூரியன், சந்திரன், நட்சத்திரம், விதி, மதி, சதி, சுகம், துக்கம், டீ, காபி, என்று ஆயிரக் கணக்கான ஏன், லட்சக்கணக்கான பிறமொழி வார்த்தைகள் தமிழில் இருக்கின்றன. லட்சம் என்பதே தமிழ் கிடையாது!!

இவற்றை எல்லாம் அப்படியே உபயோகிப்பது நலமா அல்லது கஷ்டப்பட்டு இவற்றிற்கு கொட்டை வடி நீர், சுய முயற்சியால் பெற்ற தற்காப்புக் குறைவு அடைவு (aids) என்று யாருமே உபயோகப்படுத்தாத வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது நலமா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.


Feb 18
Babu
sir, you are going like 'madai thirantha vellam'
athu seri, 'madai' enbathu thamizhaa?

good sir, keep rocking

Feb 18
Narayanan

yes. madai is thamizh. but the principal meaning is 'cooking'. you might be knowing the word 'madaippalli'.

dam and sluice are also meanings of the word.


Feb 18
Vaidhyanathan
thamizh arivom
madai enbathu thamizhthaan ithu oru kuriyeetu sol
naanarintha varai athu madaithozhil athaavathu samayalai kurikkum(padikka nala puranam)
melum neerthekki allatho anai kattu moodi enbathaakavum payanpadum


Feb 19
Narayanan
தூய தமிழில் பேசுவதாக நினைத்துக் கொண்டு சில பேர் இலக்கம் என்று சொல்கிறார்கள். அது ஸம்ஸ்க்ருத வார்த்தை என்பதே தெரியாமல்.

லக்ஷ்மணன் என்பது தமிழில் இலக்குவன்.
லக்ஷ்மி என்பது தமிழில் இலக்குமி.
லக்ஷம் என்பது தமிழில் இலக்கம்.

கோடி என்பதும் அவ்வாறே. லட்சியம், அலட்சியம், சிங்காரம் என்பவையும் அவ்வாறே.

தமிழில் 247 எழுத்துகள் உள்ளன. ஆனால் 103 எழுத்துகளில் தான் தமிழ் வார்த்தை ஆரம்பிக்க முடியும் என்பது நன்னூல் விதி.

ஒற்றுப் பிழை இல்லாமல் இன்று எழுதுவோர் மிக மிகக் குறைவு. அதுவும் orkut போன்ற வலைத்தளங்களில் தமிழ் படும் பாடு சொல்லி முடியாது. டைப் அடிப்பதும் கஷ்டம். பிழை நீக்குவதும் கடினம். நானே சில இடங்களில் பிழையுடன் தான் அடித்திருக்கிறேன்.

கவனித்து திருத்துவதற்குள் வேறு யாரவது post செய்து விடுவார்கள். phpbb2 போன்ற வசதியும் orkut-இல் கிடையாது எடிட் செய்வதற்கு. சில பேர் எழுதுவது செம காமெடியாக இருக்கும். ஆனால் சில சமயம் வயிறு எரியும்.

என்ன செய்வது 'என் செல்வங்களே' என்று கண்ணாம்பா ஸ்டைல்-இல் கண்ணீர் விடத் தான் முடியும்.


Feb 19
Narayanan

தமிழ்ப் பெயர்கள்
கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், கோபால்சாமி, ஸ்டாலின், வரதராஜன், ரஜினிகாந்த், விஜயகாந்த்- இவற்றில் எதுவுமே தமிழ் கிடையாது.

அதனால் என்ன குறைந்து போய் விட்டது? இந்தப் பெயர்கள் நாள் தோறும் தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை வீடுகளிலும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

பெயர் என்பது என்ன? ஒருவரை அழைப்பதற்கும், அடையாளம் காட்டுவதற்கும் பயன் படுவது அவ்வளவு தானே?

மேலே சொன்ன பெயர்கள் எல்லாம் தமிழ்ப் பெயர்களாகி விட்டன. மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இதை எல்லாம் தமிழ்ப்படுத்துவது இயலாத மற்றும் வேண்டாத காரியம்.

ஆனால், மக்கள் பல ஆயிரம் வருடங்களாக ஏற்றுக்கொண்ட தமிழ்ப்புத்தாண்டை வேறு நாளுக்கு மாற்றுவேன் என்று அடம்பிடித்தால், உன் பெயரை முதலில் தமிழில் மாற்றிக்கொள், பிறகு புத்தாண்டை மாற்றலாம் என்று தானே சொல்லத் தோன்றும்.


Feb 19
Babu
நல்ல வேளை, தமிழ் புத்தாண்டு பொங்கலுக்கு மாற்றப்பட்டது, நாம்
செய்த புண்ணியம். கொஞ்சம் அசந்தால் ஜூன் 3 என்று மாற்றி விடுவார்,
கேட்டால் சூரியனின் பிறந்த நாள் தானே, ஒளி பொங்கும் புத்தாண்டாக
அமையட்டும் என்று அசட்டுத்தனமாக பதில் சொல்வார்.


Mar 1
Babu
ரொம்ப நாள் கழித்து மற்றொருமுறை, நேற்று
சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' படித்தேன்.
அவர், தமிழ்நாட்டின் "டாப் டென் மோசடி" என்று பட்டியலிட்டு
இவ்வாறு கூறுகிறார்.

"ஒன்பதாவது இடத்தில் இருப்பது - தமிழ் அனங்கு, தமிழ் தாய்,
தமிழ் அன்னை என்று மொழியை வைத்து மக்களை
உணர்ச்சிவசப்படுத்தி மொழியை வளர விடாமல் தடுப்பது ...
மொழி ஒரு செய்தி தொடர்பு சாதனம் என்பதை மக்களுக்கு
புரிய விடாமல் 'தாயை பழித்தாலும் தமிழை பழித்தால்
தாங்க மாட்டேன்' போன்ற அபத்தங்களுடன் மொழி தூய்மை.

முதல் குரங்கு பேசியது தமிழ், தொல்காப்பியம் கி.மு ஐயாயிரம்
ஆண்டு எழுதப்பட்டது போன்ற அபத்தங்களை வைத்து உசுப்பப்படுகிற
ஜல்லியடி, இதற்கேற்றபடி எழுதப்படுகிற ஆராச்சி கட்டுரைகள்,
மேடை பேச்சுகள்"

என்று 30 ஆம் பகுதியில் கூறியுள்ளார். அவர் இதனை எழுதிய வருடம்
2000. இன்றும் அது பொருந்துவது காலக்கொடுமை. .


போலி தமிழ்ப் பற்று


மக்கள் தொலைக்காட்சிக்கு என்று ஒரு தனி வகைத் தமிழ் இருக்கிறது. எல்லோரும் ஒரு மாதிரி தமிழ் பேசினால் இவர்கள் தனியாக ஒரு தமிழ் பேசுவார்கள்.

'மத்திய' என்பது வடமொழியாம். அதனால் 'நடுவன்' அரசு என்று தான் சொல்ல வேண்டுமாம். ஆனால் அதிகாரி என்ற வார்த்தை தமிழ் வார்த்தையாம். அதை அப்படியே வைத்து கொள்வார்களாம்.

இன்னும் சில பத்திரிகைகள் இருக்கின்றன. செயலலிதா என்றும் சூலை மாதம், சனவரி மாதம் என்றும் தான் அச்சடிப்பார்கள். ஜ என்பது தமிழ் கிடையாதாம்.

ஆனால் ஸ்டாலின் என்று அச்சடிப்பார்கள். அப்போது மட்டும் ஸ தமிழ் எழுத்து ஆகி விடும்.

கார் என்று சொன்னால் தமிழ்ப் பற்று எப்படி வெளிப்படும். மகிழ்வுந்து என்றால் தான் நீ அக்மார்க் தமிழன். ஆனால் ஆப்பிள் பழத்தை ஆப்பிள் என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் இன்னும் இவர்களுக்கு சரியான வார்த்தை கிடைக்க வில்லை. செம்பேரிக்காய் என்று சொன்னாலும் சொல்வார்கள். அப்படி அவர்கள் கண்டுபிடிக்கும் வரைக்கும் ஆப்பிள் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.

இது போல் இன்னும் எத்தனையோ உதாரணங்கள்.

all arising out of identity crisis. போலி அடையாளங்கள் இருக்கிற வரைக்கும் இப்படிப் பட்ட முட்டாள் தனங்கள் செய்யத் தான் வேண்டி இருக்கும்.


Feb 9
Vaidhyanathan
agreed
we need to develope our language . still miles to go for that more and more kalaisorkal thevai.language grows at the rate at which it assimilates external words and keeps up its individual splendour .TAMIL is no no doubt growing phenominally except by certain pseudo dravidian politicians and araivekkakattu pvt tv channel comperers


Feb 10

@vaidyanathan, thanks for ur reply. sanskrit and thamizh both are god given languages.

by sanskrit i mean the deva bhasha and not the sanskritam modified by panini. panini streamlined the language in vedas and named it sanskrit.

and lord shiva himself gifted agasthiya rishi with the language thamizh.

but any language can grow only if it accomodates new words and phrases from other languages and thamizh has done that tremendously.

if thamizh is still spoken by 15 crore people across the globe, then it is due to its accomodative nature. the thamizh we use today has almost 50% of words from other languages.

but this process was stalled by the dravidian politics starting from justice party, for the last 60 odd years.

we need not translate all the words or create new tongue-twisting words for other language words. we can directly handle them. there is nothing wrong in it.
Feb 10
delete
invisible Narayanan
because it is easy for identification and saves lot of time and makes lot of people use it.

what is the use of finding a word for 'cycle' when the word 'cycle' has become a part and parcel of every tamilian's life.

then what are they going to do about legal terms like 'quid pro quo' or 'sine die' or 'suo motto' or ad hoc, or ad idem.

and what about medical terms? we can try hard and formulate few 100 words. what about the rest? even if we coin who are going to use it.

what about other areas of specialised studies? are we going to tamilise all engineering and accounting and technological terms into thamizh. is it possible? even if it is possible, to whose welfare?

real and good thamizh exists in our ancient texts. those who want to learn and speak good thamizh let them first them know thirukural, kamba ramayanam and villi bharatham by heart and then think about making new words. all the necessary words are already there.


Feb 10

let us play a game.
anybody please tell a sentence in thamizh. i will tell u how many words are non tamil in that.


Feb 10

makkal tv - one of its kind.
of course, i respect makkal tv for its gutsy attempt of not resorting to cinema as their main source of existence.

if we take cinema out, then almost all channels will go bankrupt.

but, makkal tv is brave enough to do that and lot of programmes are decent and worth watching.

but, everything is adjudged by who is saying what? with the credibility that pmk enjoys among the public, even if it says some gud things like 'madhu vilakku' et al, people are reluctant to accept what they say!

nannan and his bigotry make it queasy to watch his programmes. and forcible utterances of non-existent thamizh words makes one wonder whether they are watching a thamizh tv channel itself.

Feb 10

correction
in the above post, it should read as 'whose avail' instead of 'whose welfare'
Feb 11
Dan
Well said Narayanan....again i dont understand onething...what is there to boast on language or to be over zealous in it....many people dont understand the basic thing behind language..after all its a mean of communication wherein our ideas has to be communicated to the intended person/group.....but in our country, many states are crazy to be zealous after their language...esp in Tamilnadu and esp DMK or DK parties....they make it as a business and treat it in terms of vote bank.....i remember a educational minister who did this stupid work of experimenting the equivalent tamil words for Doctor, Ph.D ,etc., and finally Cho asked in Thuglak...the tamil equivalent for "Stalin"..for that this chap couldnt reply anything...forgot his name..


Feb 11

welcome dan. you are right. it is a business here.


Feb 11
Babu
இன்று பெரியார் என்றும், தமிழ் என்றும் அறை கூவும்
பாதி போலி நாத்திகர்களுக்கு சுத்தமான தமிழில் பல
நூற்றாண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட திவ்ய பிரபாந்தமும்
கம்ப ராமாயணமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வைஷ்ணவ மதத்தினரும் சைவ மதத்தினரும் ஏதோ தமிழ் அற்றவர்
போலவும், பெரியார் வழியில் வரும் இந்த திராவிடர்கள் தான்
மறத்தமிழர் என்று போலி பிரச்சாரம் செய்யும் இவர்கள் முதலில்
ஒன்றை புரிந்து கொள்ளட்டும். இந்து மத வழிப்பாடும், பாடல்களும்
இல்லாவிடில் இன்று இவர்களுக்கு தமிழ் தெரிந்திருக்காது, என்றோ
அழிந்திருக்கும்.

ஆனால் இவர்களை பொறுத்தவரை பிராமணர்கள் - ஆரியர்கள்,
தமிழ் மீது பற்றில்லாதவர்கள். திராவிடர்கள் - தமிழை காப்பவர்கள்.

தமிழ் என்ன கன்னி பெண்ணா அல்லது கணவனை இழந்த
விதவையா அல்லது இலங்கை தமிழர்கள் போன்ற அகதியா, அதனை
காப்பாற்றுவதற்கு. அது வெறும் மொழி. இவர்கள் இன்று பெயர்
பலகைகளில் ஆங்கிலத்தை அழித்து தமிழில் எழுதுவதாலோ
அல்லது 'தொல்' என்று போட்டுக்கொள்வதாலோ தமிழ் வளர்ந்து
விட போவதில்லை. எல்லாம் போலிகள்.


Feb 11

adra sakka adra sakka.


Feb 12
Hariharasudhan
pinni buduven..badavaaa....
these stupid DK and its branches talking about tamizh and tamizh patru....
somebody brilliantly pointed out that these buggers cannot pronounce the letter "zha"
in tamizh which is the beauty of the language.....

ex: captain vijayakanth claiming to be marathamizhan cannot say the following
1. tamizh ----- he says tamilan
2. shajahan -- chachakaan
3. sharukah - he says saarugaaan
4. suhaasini - sugaaacine
5. Hariharasudhan -- arikara sudhan (en peru ingey repair..)

on top of these....they have named it "SUN TV" --- as their family Sat channel (though itz split now)
where as in
kannada it is udaya TV
malayalam it is SURYA TV....
why wasnt it KATHIRAVAN TV , AADAVAN TV in tamizh....

90% of these guyz in film industry could not say tamizh as tamizh....
vikram, suriya, vijay etc.,etc., poor prakash raj makes an attempt to speak great tamizh...


Feb 12
Hariharasudhan
typical chennai tamizh
we being in metros...itz difficult these days to even speak in pure tamizh for 5 continuous minutes......

a typical simple conversation between 2 youngsters in beach road -- idhula % of tamizh vaarthaigal evlonnu neengaley kanakku podungo.....

guy1: Sir...inga ICE HOUSE eppadi sir poganum...

guy2: bus-la poreengala, auto-la poreengala illai CAR-u yedavadhu vechurukeengala

guy1: car ellam illa sir...BIKE-thaan

guy2: abdiyaa....seri...ibdee road-la straightaa poyi, signal-ai thaandi, left-la odichaa oru park-u varum...angathaan iruku

guy1: thanks sir...

guy2: enna sir...vandila light-ai kaanum

guy1: yen sir....??

guy2: police maama thollai jasthi ...adaan sonnen...

guy1: nalla velhai...purse-la inniku license iruku
------------------------------------

ha ha ha


Feb 12

welcome hari. andha 'brilliant somebody' naan daan. hahahha


Feb 12
Vaidhyanathan
on tamil;
real tamil lovers are those who practise tamil not as politics but as a way of life.they know how to respect and accept other languages and keep nururing that of their own as well.
only in our state certain netas imply hating other languages means loving tamil,but i have been in tribal orissa for more than 71/2 years now i know hindi as well as oriya but that has not prevented myself from satiating me by reading quality Tamil literature like ponniyin selvan,kambanin kaaviyam.
I am now reading periya puranam.
our politicos never understand that language is just for communications and nothing else.they just flare up emotions and arouse ego to attain selfish interests
mozhi, inam,madham,jaathi ellavatraiyum vida muthanmaikkuriyathu maanudam thaan ithu saanro aaynthu aritha mudibu-this may satisfy mr balaji the other guy who is very much active on lankan issue.it is also used to flare up mozhi,ina veri which already has taken 2 young lives.


Feb 13
Dan
this one is hilarious
http://www.youtube.com/watch?v=m5mSL-99dYM&feature=related
i really like this tamil .......


Feb 13

mozhi vyaabarigal yaarum thee kulippadhillai. adhai nambi emaarum sadharana makkal daan madigiraargal.

thangal pillaigalai thamizh katru tharum palligalil serpadhillai. ooruku daan upadesam.

mozhi matravargaludan thodarbu kolla oru vazhi. avvalavu daan.

yaavarukkume thangal thai mozhi meedhu patru irukka daan seiyum. thai meedhu iruppadhu pola. adharkkaga matravan thaayai pazhippadho, mattam thattuvadho anaagarigamanadhu.

thai meedhu anbu irukalam. aanal veri iruka koodadhu. edhu melum veri irundhaal veezhchikku thaan vazhi vagukkum.


Feb 13

soakka sonnaba dan-u. sugurra irundhichu.
 
Custom Search