Wednesday, November 28, 2012

Vedic Learning

Veda Learning.

The vedic scholars get into vedapadasla and learn in Guru kula vasa style.They start learn with Vakyam,then Padam, kramam, Jata, Mala, Sikha, Rekha, Dwaja, Danda, Ratha and then they reach Ganam.
Then only they are called as Ganapadikal. It takes 8 to 13 years to go to Ganam level .

The system for vedic learning starts with Panchadhi,few panchadhi's called anu vagam,few anuvagam called as Prassanam,more prasannam called as Kandam and more kandams called only sagai.

The vedic adhyashagas avoid teaching veda on Ashtami,Sadurdasi,Pournami,Amavasya and Prathamai days. Some avoid cloudy days too.





via 
Kalyanasundaram Ramachandaran

Wednesday, November 21, 2012

think of any number. add 2 to it. double it...

think of any number. add 2 to it. double it. add 2 to it. double it.. divide by 4. add 1. subtract the original number you thought from the result. remember this answer.

select 'a'if your answer is 1, 'b' if your answer is 2 etc. 

Now, think of a country starting with that alphabet

now, think of an animal, small or big, which starts with the next alphabet (b, if your first letter was a, c if your first letter was b etc.) think of its colour..

mmmm.. let me guess... there are no grey/black elephants in denmark... :)

the above is a standard item in magic shows..

My point is with this limited, silly mind we question several things beyond our comprehension...

நீங்கள் எவ்வளவு தெய்வீகமானவர்கள் என்று உங்களுக்கு காட்டுகிறேன்.. மிகவும் யோசிக்காமல் சட்டென்று 2 பூக்கள் பெயரை நினைத்துக் கொள்ளுங்கள்.

எல்லோரும் என்ன தெரியுமா நினைப்பார்கள்? செம்பருத்தி, செண்பகப்பூ என்று நினைப்பார்கள். ஆனால் நீங்கள் ரோஜா, மல்லி என்று நினைத்திருக்கிறீர்கள். இது நீங்கள் மல்லிகைப்பூவைப் போல தூய்மையான மற்றும் ரோஜாவைப் போன்று மென்மையான மனது கொண்டவர்கள் என்று காட்டுகிறது...

இது நம்மூரு டுபாகூரு. மேலே சொன்னது அவங்கூரு டுபாகூர்.

இந்த சிறுமதியை வைத்துக்கொண்டு பெரிதினும் பெரிய விஷயங்களைப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

Thursday, November 15, 2012

எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா

எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும்! – சாலமன் பாப்பையா

-----------------------------------------------------------------------------

டிவி. சேனல்களில் பயனுள்ள பட்டிமன்றங்கள் வாயிலாக தமிழகம் அறிந்த இந்தப் பேராசிரியர் மதுரை கம்பன் கழகத் தலைவர். இன்று உலகமே நாடும் சம்ஸ்க்ருதம் பற்றிப் பேசுகிறார்:

"எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப் பெரியாரிடம் சம்ஸ்க்ருதம் கற்றேன். அது 1953ல். அதோடு சரி. இளமையில் வறுமை காரணமாக மேலும் சம்ஸ்க்ருதம் படிக்க முடியாமல் போனது. ஹிந்தி மொழியையே படிக்காதே என்ற சூழலில் சம்ஸ்க்ருதம் படிப்பது எப்படி? மொழி வெறுப்பு நிறைந்த கெட்ட காலம் அது. ஆனால் எனக்கு சம்ஸ்க்ருதத்திடம் வெறுப்பு இருந்ததே கிடையாது. “இந்த பிறவியில் எனக்கு சம்ஸ்க்ருதம் கிடையாது” என்பது மீனாட்சி அம்மையின் திருவுள்ளம் போலும்.

தமிழ் ஒரு கண் என்றால் சம்ஸ்க்ருதம் மற்றொரு கண். இரண்டு கண்களும் முக்கியம். “பார்வை” சரியாக இருக்க வேண்டுமானால் இரண்டு கண்களும் தேவை. இந்திய மண்ணில் விஷயம் தெரிந்தவராய் உருவாக ஒருவருக்கு இந்த இரண்டும் வேண்டும்.

எம்.ஏ. (தமிழ்) படிக்கும் போது, “வட எழுத்து நீக்கி வருவது சொல்” என்ற பொருள்பட இலக்கண சூத்திரம் படித்தேன். அதாவது தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் வடமொழி இருந்திருக்கிறது. எனவே தான் “அதை நீக்கி” என்று கூறியிருக்கிறார். ஆக, தமிழில் சம்ஸ்க்ருதம் இருந்தது. பிற்காலத்தில் தேவநேய பாவாணர், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்டோர் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தைத் தவிர்க்க “சமக்கிரதம்”, “சமற்கிரதம்” என்றெல்லாம் சொல்லிக் காட்ட வேண்டி இருந்தது. காரணம் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தாம்.

அது சரி “வடமொழி” என்றால்? சிலர் வடக்கிலிருந்து வந்ததால் என்று விளக்கம் சொல்வதுண்டு. ஆனால் வட (vata) என்ற சொல்லுக்கு ஆலமரம் என்று பொருள். ஆலின் கீழ் அமர்ந்து தான் உயரிய ஞான உபதேசங்கள் அருளப் பட்டன. அவற்றைக் கொண்ட மொழி; எனவே வடமொழி என்பேன். இது “பிரிட்டானிக்கா” கலைக்களஞ்சியம் தந்துள்ள விளக்கம். இது நமக்குத் தெரியாமல் போயிற்றே! அவன் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது பாருங்கள்!!

ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்! வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.

தமிழ் போலவே சமஸ்க்ருதமும் செம்மொழி. ஆக, சம்ஸ்க்ருதம் படிப்பது தமிழுக்குத் தொண்டு. இப்படிப் பலரும் அறிந்த மொழி, அனைவரும் பாராட்டும் மொழி, பதவிப் போட்டி காரணமாக அனைவரும் படிக்க முடியாமல் செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும். குறைந்த பட்சம் – ஆம் – குறைந்த பட்சம் பகவத் கீதையாவது படிக்கணும். சம்ஸ்க்ருதம் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒவ்வொருவரும் புண்ணியவான். அன்னவர்கள் அனைவரையும் போற்றுகிறேன்.

(2012ம் ஆண்டு ஆகஸ்டு 19 அன்று சென்னை சம்ஸ்க்ருத பாரதி கருத்தரங்கில் அவர் நிகழ்த்திய உரையில் இருந்து).

Courtesy: Vijaya Bharatham 7.9. 2012

Tuesday, November 6, 2012

மோக்ஷம் அருளிய மகான்

ரெண்டு ஆசை- மஹா பெரியவாளிடம் ஒரு தெலுங்கு சிறுவன்

ஸ்ரீ சைலத்தை நோக்கி மகாபெரியவா பரிவாரத்தோடு யாத்திரை போயிண்டிருந்தபோது இது நடந்தது கர்னூல் லே வரவேற்பு ஏற்றுக்கொண்டு பிரசங்கமும் பண்ணியாச்சு. மேற்கொண்டு யாத்திரை தொடர்ந்தபோது ஒரு சின்ன கிராமம். திடீரென்று மழை. "சுவாமி சிவிகையில் ஏறிக்கணும்". “ அதெப்படி? இத்தனைபேர் மழையிலே நனைஞ்சுண்டு நடந்துவரும்போது நான் சிவிகையிலா ? “ஹூம் ஹூம் நானும் நடந்தே வரேன்" மேற்கொண்டு நடக்க முடியாதபடி மழை பலத்தது. 

ஒரு பழைய சிவன் கோயில் தென்பட்டது. அதில் தங்க பெரியவா முடிவு பண்ணியாச்சு. காட்டு தீ போல மஹா பெரியவா சிவன் கோயிலில் மழைக்கு தங்கி காஷாயம் மாற்றிகொண்ட செய்தி பரவ ஊர் ஜனங்கள் அனைவரும் பெரியவாளுக்கு பூரண கும்பத்தோடு வரவேற்பு தந்து அலைமோதினர். அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு யாத்திரை தொடர்ந்தார் பெரியவா. 

ஏழுஎட்டு மைல் தூரத்தில் ஒரு கிராமம். அதன் ஜமிந்தார் விஷயம் கேட்டு ஓடிவந்தார். கிராமமே அவரை சூழ்ந்துகொண்டு த ங்கள் கிராமத்தில் பெரியவா தங்கி அருள் செய்ய வேண்டிகொண்டார்கள். பெரியவாளுக்கு என்னதோன்றியதோ? இங்கு 21 நாள் இருக்கபோறேன் என்று அறிவித்தார். ஊரில் சத்திரம் ரெடி பண்ணப்பட்டது. விறு விறென்று கொட்டகை போடப்பட்டது. 

மறுநாள் காலை. பெரியவா அருகில் இருந்த புஷ்கரணிக்கு ஸ்நானத்துக்கு போயாச்சு. மடத்து காரியஸ்தருக்கு மஹா கவலை. அந்த கிராமத்தில் பூஜைக்கு வில்வமே கிடைக்கவில்லை. மூன்று தள வில்வம் ஒன்றை மாதிரிக்கு காட்டி ஊர் ஜனங்களிடம் ஒரு கூடை இதுபோல இருக்கிற வில்வம் கொண்டு வர வேண்டும் என கெஞ்சினார் காரியஸ்தர். எங்கு தேடியும் வில்வம் கிடைக்கவில்லை. மணி பத்தரை ஆயிற்று, பெரியவா பூஜை சாமான்களையெல்லாம் பார்த்துவிட்டு "வில்வம் இல்லையா?" என்று கேட்டார். கண்ணில் ஜலம் வழிய காரியஸ்தர், “சுவாமி, ஜமிந்தார் எல்லா ஆட்களையும் அனுப்பியிருக்கார். வந்துடும்” என்றார். பெரியவா பேசாமல் சத்திரத்துக்கு பின்னால் மாட்டு தொழுவத்தருகில் ஒரு கல் பாறையில் தியானம் பண்ண அமர்ந்துட்டா. 

பதினொன்னரை மணியிருக்கும் இன்னும் வில்வம் வரவில்லை. சரி இன்று சந்திர மௌலீஸ்வரருக்கு பூஜையோ பெரியவாளுக்கு பிக்ஷையோ இல்லைபோலிருக்கே. இன்னும் இருபது நாள் வேறு இங்கு இருக்கணுமே”??? த்யானம் பண்ணிகொண்டிருந்த பெரியவா கண் திறந்தா. 

ஒரு சிறு புன்னகை.. ஒரு மடத்து பூஜா கைங்கர்ய பையன் ஓடிவந்தான். தலையிலே ஒரு பெரிய கூடை பச்சை பசேலுன்னு நிறைய மூணு தள வில்வம்!!!. பெரியவாளுக்கு சந்தோஷம். “”வில்வமே கிடைக்காதுன்னு சொன்னாளே எப்படி கிடைச்சுது??.“யார் இவ்வளவு ஸ்ரத்தையா வில்வதளம் பின்னமாகாமல் பரிச்சிருக்கா??. வில்வம் தான் வந்துடுத்தே பூஜை ஆரம்பிப்போம்”” என்று பெரியவா சொல்லி சாஸ்த்ரோக்தமா பூஜா நடந்து எல்லாருக்கும் பிரசாதமும் வழங்கியாச்சு. “” யார் வில்வம் கொண்டுவந்தாளோ அவாளை கூப்பிடுங்கோ பிரசாதம்வாங்கிக்கட்டும்”” என்று பெரியவா சொன்னபோது ஸ்ரீ கார்யம் நடுங்கிக்கொண்டே "பெரியவா, இது யார்கொண்டுவந்ததுன்னே தெரியலே, கீழண்டை வாசலிலே மண்டபத்து ஓரத்திலே மறைவா ஒரு திண்ணையிலே இந்த கூடை இருந்தது. யார் வச்சதுன்னே தெரியலே."

“ ஒருக்கால் சந்திர மௌலீஸ்வரரே தன்னுடைய பூஜைக்கு எடுத்துண்டு வந்திருக்கலாம்”” என்று பெரியவா சிரிச்சுண்டே சொன்னா. அன்று முழுதும் கோலாகலமா பூஜா, இசை, பிரவசனம், பிரசங்கம் எல்லாம். ஊர் ஜனங்களுக்கு பரம சந்தோஷம். ஸ்ரீகார்யதுக்கு மட்டும் வயத்திலே புளி கரைச்சுது. நாளைக்கு என்ன பண்றது??? . 

மறுநாள் காலை. வில்வம் கண்டுபிடித்து கொண்டுவந்த பையனையே கெஞ்சினார் " “அடே ஆபத்பாந்தவா!!! இன்னிக்கும் அந்த மண்டபம் மூலைலே பந்தக்கால் பக்கத்துக்கு திண்ணையிலே வில்வம் கிடைக்குமா பாரேன்!!” சொல்லிவச்சாப்போல் அதே இடத்துலே இன்னிக்கும் ஒரு பெரிய கூடை நிறைய வில்வம்!!! மகாபெரியவா பூஜைக்கு தயாராகி பூஜா திரவியங்களை நோட்டம் விட்டு வில்வகூடையை பார்த்துவிட்டு ஸ்ரீ கார்யத்தை அர்த்தபுஷ்டியுடன் நோக்கினார். 

"ஆமாம்!, பெரியவா இன்னிக்கும் யாரோ கொண்டுவச்ச வில்வகூடை தான் இது.” “ யார் இப்படி ரகசியமா கொண்டு வக்கிரான்னு கண்டுபிடி. நாளைக்கு விடிகாலம்பர முதல்ல நீ கண்காணி. அந்த ஆசாமியை கையோட எங்கிட்ட அழைச்சுண்டு வா””. என்று மகா பெரியவா உத்தரவு போட ஸ்ரீ கார்யம் மறுநாள் அதிகாலை மண்டபத்து ஓரம் மறைந்துகொண்டு வில்வம் யார் கொண்டுவந்து வைக்கிறார்கள் என்று காத்திருந்தபோது எட்டரை மணி சுமாருக்கு ஒரு தெலுங்கு பையன், தலையிலே கட்டு குடுமி, அழுக்குவேஷ்டி மூலகச்சம், தலையிலே ஒரு கூடையில் வில்வம் எடுத்துவந்து வழக்கம் போல பந்தக்கால் அருகேவைத்துவிட்டு திரும்பும்போது எதிரே ஸ்ரீ கார்யம் வழி மறித்து நின்றார். பையன் ஸ்ரீ கார்யம் காலில் விழுந்துவணங்கினான். 

ஸ்ரீ கார்யம் அரை குறை தெலுங்கிலே "போய் குளிச்சுட்டு, தலையை முடிஞ்சுண்டு, நெத்திக்கு ஏதாவது இட்டுண்டு துவைத்த வேஷ்டி வஸ்த்ரத்தொடு மத்யானம் வா, சாமிகிட்டே அழைச்சுண்டு போறேன்””.என்றார். பையன் தலையாட்டிவிட்டு நழுவினான். மூணுமணி சுமாருக்கு வெள்ளை வேஷ்டி, நெத்தி பூராவிபுதி, எண்ணெய் வழிய தலை வாரி குடுமி முடிஞ்சுண்டு பயபக்தியோடு அந்த பையன் மெதுவா உள்ளே நுழைஞ்சான். 

எதையோ தேடிக்கொண்டிருந்த பெரியவா விழிகள் அந்த பையனை பார்த்தவுடன் மலர்ந்தது. நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்ற பையனை அருகே அழைத்தார்.
“நீ யாரப்பா உன்னோடைய பேர் என்ன? 
“புரந்தர கேசவலு”’ங்கய்யா.
“தமிழ் பேசறியே, எப்படி??”
“அய்யா எங்கப்பாதாங்க சொல்லி கொடுத்தாங்க. அம்மா ரெண்டு வயசிலேயே பூட்டாங்க. நாங்கல்லாம் மதுரைபக்கம் உசிலம்பட்டிங்க. அப்பாரு புழைப்புக்கு இங்க எனக்கு ஆறு வயசு இருக்கும்போது கூட்டியாந்தாரு.ஜமீன்லே மாடு மேக்கற வேலை. பள்ளிக்கூடம் போகலே. அப்பாரு பாட்டுன்னா உயிரையே விட்டுடுவாரு. தியாகராஜ சாமி பாட்டு புரந்தரதாசரு பாட்டு எல்லாம் பாடுவாரு. எனக்கும் சொல்லி குடுத்தாரு. இப்ப இல்லீங்க ரெண்டு வருஷம் முன்னாலே பூட்டாரு. நான் தான் இப்ப ஜமீன்லே மாடு மேக்கறேன். பன்னண்டு வயசுங்க இப்போ””.
“”அது சரி. இந்த ஊர்லே வில்வம் கிடையாதாமே ;உனக்கு மட்டும் எப்படி எங்கே கிடைச்சுது??”
“நாலு கல்லு தாண்டி மலை அடிவாரத்துலே மாடு மேக்கும்போது ஒருதடவை அப்பாரு, “” ஏலே, புரந்தரா இதோ அந்தாக்கலே இருக்கு பாரு மூணு மரம் அது தான் வில்வம் மரம். சிவன் சாமிக்கு அது போட்டு பூஜைபண்ணுவாங்க. ரொம்ப விசேஷமான இலை”” அப்படின்னு சொன்னாரு.

மூணு நாள் முன்னே ஜமீன்லே அந்த இலை அர்ஜண்டா வேணும் எண்டு பேசிக்கிட்டாங்க. 
சாமி மடதுக்காரங்க கூட இலையைக்காட்டி கேட்டாங்க. மாடு மேக்க்றவன் கொடுத்தா பூஜை செய்ய வாங்க மாட்டாங்களோ ன்னு தான் யாருக்கும் தெரியாம கூடையிலே தெனமும் கொண்டு வச்சேங்க. சாமி சத்தியமுங்க. மன்னிப்பு கேக்கறேங்க”” 

மஹா பெரியவா அவனை கண்ணால் பரிபூர்ணமாக பார்த்துக்கொண்டே “”புரந்தரகேசவலு உனக்கு என்ன தேவை, ஏதாவது ஆசை இருந்தா சொல்லு மடத்திலேருந்து செய்ய சொல்றேன்”” என்றார். 

"சிவ சிவா!! சாமி, எங்கப்பாரு “ஏலே புரந்தரா, எதுக்கும் ஆசை படக்கூடாதுடாம்பாரு. எனக்கு ரெண்டே ஆசைங்க. ஒன்னு இப்போ சொல்றேன் மத்தது சாமி இந்த வூர்லேருந்து போரன்னிக்கு சொல்றேன்”” கண்லே பொலபொலன்னு கண்ணீரோடு அவன் சொன்னதை கேட்டு மகாபெரியவா மிக்க பரிவுடன் “”புரந்தரா, உன்னுடைய முதல் ஆசையை சொல்லு” என்றார். 

“சாமி எங்கப்பாரு எனக்கு புரந்தர தாசர் தியாகராஜர் பாட்டு எல்லாம் கொஞ்சம் சொல்லி கொடுத்ததை சாமி முன்னாலே நீங்கள் இந்த ஊரிலே இருக்கிறவரை நான் பாடி காட்டி சாமி அதைகேக்கணும்””. மஹா பெரியவா புலகாங்கிதமானாள். “அப்படியே ஆகட்டும்டா. நீ பாடு நான் கேக்கறேன். சந்திர மௌலீஸ்வரர் கிருபை உனக்கு உண்டு. க்ஷேமமா இருப்பே”””. பெரியவா பிரசாதமும் தன் கழுத்திலிருந்து ஒரு துளசி மாலையும் அவனுக்கு கொடுத்து ஆசிர்வதித்தார். 

பெரியவா ஊரில் இருக்கும்வரை தினமும் வில்வமும் புரந்தரன் பாட்டும் பெரியவாளுக்கு கிடைத்தது. அவன்குரல் இனிமையாக இருந்தும் உச்சரிப்பு பிழைகளை அவ்வப்போது பெரியவா திருத்தி அவன் பாட்டில் மகிழ்ந்தார்.

21 ம் நாள் பெரியவா ஊரை விட்டு கிளம்பிட்டா. அனைவருக்கும் ஏக்கம். பிரசாதங்கள் வழங்கி புறப்படும்போதுபெரியவா கண்கள் எதையோ தேடியது. ஓரத்தில் கண்களில் நீரோடு ஒரு கம்பத்தை கட்டிக்கொண்டு புரந்தரன்நின்று கொண்டிருந்தான். அவனை கை காட்டி அருகில் அழைத்து “” புரந்தரா, உன்னுடைய இரண்டாவது ஆசையை இன்னிக்கு சொல்றேன்னியே அது என்ன?

“ சாமி மாடு மேக்கறச்சே நாங்க பேசிக்குவோம். அப்பாரு சொல்வாரு இத பார்றா புரந்தரா, நமக்கு சாமி கிட்டேஒரு ஆசை தான் கேக்கணும். செத்துட்டம்னா மோட்சம் வேணும்னு அது மட்டும் தான் கேக்கனும்பாரு. சாமி, எனக்கு மோட்சம் கிடைக்கனும்னு அருள் செய்யுங்க,””

மகாபெரியவா அதிர்ந்து போனார். பரப்ரஹ்மம் வாஞ்சையோடு அவனுக்கு அருளிற்று.”” புரந்தரா, உரிய காலத்தில் உனக்கு மோட்சம் கிடைக்க நான் சந்திர மௌலீஸ்வரரை வேண்டிக்கறேன். நீ சந்தோஷமா போ”. என்று ஆசிர்வதித்தார். பிறகு ஜமீன்தாரை கூப்பிட்டு இந்த புரந்தரகேசவன் சம்பந்தமா எல்லா விஷயங்களையும் மடத்துக்கு தெரியப்படுதுங்கோ”” என்றார். 

பல வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் மத்யானம் ரெண்டு மணிக்கு பெரியவா திடீரென்று எழுந்து காமாட்சிஅம்மன் கோயில் புஷ்கரணிக்கு சென்று ஸ்நானம் செய்து தியானத்தில் அமர்ந்தார். விட்டு விட்டு ஒருமணிக்கொருதரம் புஷ்கரணியில் ஸ்நானம் ஜபம். ஆறு மணி வரை இது தொடர்ந்தது. பெரியவா கரையேறினா. 

அப்போ ஏழு மணியிருக்கும் ஒருத்தன் மடத்திலேருந்து வேகமாக சுவாமிகள் கிட்ட வந்தான்.என்ன என்று கண்களால் வினவ “”கர்னூல்லே இருந்து தந்தி. யாரோ “”” புரந்தரகேசவலு சீரியஸ்”” என்று அனுப்பியிருக்கா. யார்னு தெரியலே பெரியவா”” . 

ஸ்ரீ கார்யதிடம் பெரியவா சொன்னது இது தான்:

“”புரந்தர கேசவன் இப்போ இல்லை. விஷ ஜுரத்திலே அவஸ்தைப்பட்டு போய்ட்டு வேறே பிறவி எடுத்துட்டான். அவனுக்கு இன்னும் ஆறு பிறவி இருக்கு. அதுக்கப்பறம் அவன் மோக்ஷம் போகணும்னு சந்திரமௌலிஸ்வறரை பிரார்த்தனை பண்ணி ஆறு பிறவிக்கும் ஸ்நானம் பண்ணி ஜபம் பிரார்த்தனை பண்ணி அந்த நல்ல ஆத்மாவுக்கு என்னுடைய கடமையை செஞ்சுட்டேன்".

via varagooran narayanan
 
Custom Search