Alessandro Alessandroni ஒரு ஆச்சரியமான திறமைசாலி. அற்புதமான கிட்டார் பிளேயரான இவர் ஒரு சிறந்த இசை அமைப்பாளரும் கூட. கிட்டத்தட்ட 40 படங்களுக்கு இசையமைத்துள்ளார். Sergio Leone, Ennio Morricone மற்றும் Alessandroni யின் கூட்டணியில் உருவான பல படங்கள் உலகப்பிரசித்தி பெற்றவை.
'ஸ்பகெட்டி வெஸ்டர்ன்' என்று ஒரு genre ஐயே உருவாக்கியவர்கள் இவர்கள். வெஸ்டர்ன் என்பது தமிழில் புரியும்படி சொன்னால் ஜெய்ஷங்கரின் (கர்ணனின்) கௌபாய் படங்கள். இவர்கள் இத்தாலியில் இருந்து படங்கள் எடுத்ததால் spagetti western என்று அழைக்கப்பட்டன. macaroni வெஸ்டர்ன் என்றும் ஒரு ஜானர் உண்டு.
இத்தாலி நாட்டு இளையராஜாவான Morricone (500 படங்களுக்கு மேல்), பட்ஜெட் காரணமாக செர்ஜியோ லியோன் படங்களில் பெரிய ஆர்கெஸ்ட்ரா பயன் படுத்த முடியாததால், கிட்டார், மோர்சிங் (jewish harp ), விசில், சாட்டைச்சத்தம், துப்பாக்கி சத்தம், ட்ரம்பெட் என்று செலவில்லாமல் பார்த்துக்கொண்டார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தானே.. இந்த 'வாத்தியங்களை' வைத்துக்கொண்டே ஒரு இசைப்புரட்சி செய்தார்.
இங்கு தான் தன் பால்ய ஸ்நேகிதனான அலெசாண்ட்ரானியின் அற்புத திறமையை பயன்படுத்திக் கொண்டார். dollars trilogy என்று சொல்லப்படும்
A Fistful of Dollars (1964), For a Few Dollars More (1965) மற்றும் The Good, the Bad and the Ugly (1966) ஆகிய படங்களில் இவர்களின் கூட்டணி அட்டகாசம் செய்தது.
Alessandroni கிடார் வாசித்துக்கொண்டே விசில் அடிப்பதில் கில்லாடி. இந்த 3 படங்களிலும் அவருடைய விசில் மற்றும் கிட்டார் தான் தீம் மியூசிக். கம்போஸர், கிட்டார் கலைஞர் என்பதைத்தாண்டி இந்த விசில் திறமை தான் அவரை உலகிற்கு அடையாளம் காட்டியது.
https://youtu.be/CpZjvbSC9_M
https://youtu.be/mLXQltR7vUQ
https://youtu.be/h1PfrmCGFnk
https://youtu.be/I3AFeCKFZl0
https://youtu.be/pLgJ7pk0X-s
https://youtu.be/2RGrz1mZve8
******
தமிழ்ப்படங்களில் Whistling என்பதை முதன்முதலாக விஸ்தாரமாக பயன்படுத்தியது மெல்லிசை மன்னர்களே.. சட்டென்று நினைவுக்கு வருவது நீரோடும் வைகையிலே, வந்த நாள் முதல், உள்ளத்தை அள்ளிக்கொஞ்சம் தா போன்ற பாடல்கள்.. யார் அந்த whistler என்பதை விவரம் அறிந்தவர்கள் சொல்லலாம்.
https://youtu.be/0Ded74fqkOA
https://youtu.be/Yhrp0_XgjdQ
https://youtu.be/Xt9pncmbTYI
SPB அருமையாக விசில் அடிக்கக்கூடியவர். மேடைகளில் பாடும் போதே விசிலும் அடித்து அசத்துவார்.. ரஹ்மானின் தொடத்தொட மலர்ந்ததென்ன பாடல் பற்றி அவர் பேசியது இதோ..
https://www.youtube.com/watch?v=U9qmN1mNJnU
YGEE MAHENDRA அவர்களும் ஒரு அற்புத விசில் கலைஞர்.. அவருடைய நடிகர், மிருதங்க வித்வான் போன்ற பல முகங்களில் இதுவும் ஒன்று. MSV - TKR பாடல்களை விசிலில் வாசித்து ஒரு சீடியே போட்டிருக்கிறார்.
https://youtu.be/94Bfzel8zPM
மெல்லிசை மன்னர்கள் தவிர எனக்கு ஞாபகம் வருவது சுதர்சனம் இசையில் அன்னை படத்தில் வரும் 'புத்தியுள்ள மனிதர் எல்லாம்' பாடல், மற்றும் தேனிலவு படத்தில் ஏ.எம்.ராஜா இசையில் பாட்டு பாடவா பாடலில் வரும் PRELUDE . மற்ற விசில் பாடல்களை ரசிகர்கள் நிரப்பலாம்.
https://www.youtube.com/watch?v=8ImA2bPgICM
https://www.youtube.com/watch?v=0qV8W1z6ZZo
********
ராஜா இசையில் பல பாடல்களில் விசில் அற்புதமாக பயன் படுத்தப்பட்டுள்ளது. அவரே ஒரு விசில் கலைஞர் தான். காதலின் தீபம் ஒன்று பாடல் கம்போசிங் போது உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். PRELUDE, INTERLUDE எல்லாம் நோட்ஸ் எழுதி விடலாம். TUNE சொல்லிக்கொடுக்க பாடித்தானே ஆகவேண்டும்.. பாட முடியாத நிலையில் முழு மெட்டையும் விசில் அடித்தே சொல்லிக்கொடுத்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
நினைவில் வரும் விசில் பயன் படுத்தியிருக்கும் ராஜா பாடல்களை கொடுக்கிறேன். மேலும் உள்ளவற்றை ரசிகர்கள் கூறலாம்.
ஏ ஆத்தா - பயணங்கள் முடிவதில்லை
மதன மோக ரூபசுந்தரி - இன்று போய் நாளை வா
காங்கேயம் காளைகளே - இன்று நீ நாளை நான்
டார்லிங் டார்லிங் - பிரியா
ஈரமான ரோஜாவே - இளமைக்காலங்கள்
உறவெனும் இனிய வானில் - நெஞ்சத்தை கிள்ளாதே
நினைவோ ஒரு பறவை - சிகப்பு ரோஜாக்கள்
வந்தாளே அல்லிப்பூ - கண் சிவந்தால் மண் சிவக்கும்
இவை எல்லாவற்றையும் விட ஒரு பாடல் எனக்கு மிகவும் விருப்பமான பாடல் ஈரவிழிக் காவியங்கள் படத்தில் வரும் பழைய சோகங்கள் என்ற பாடல். அந்தப் படத்தில் அனைத்து பாடல்களுமே Avant garde என்று ராஜா ரசிகர்களால் கொண்டாடப் படுபவை. ராஜா செய்த ஆல்பங்களிலேயே சிறந்தது என்று சொல்பவர்களும் உண்டு.
கிட்டார், ராஜாவின் குரல், மற்றும் விசில் அவ்வளவு தான். அந்த கிட்டார் ரிஃப்பை கேட்கும் போதெல்லாம் எனக்கு அலெசாண்ட்ரானியின் fist full of dollars தான் ஞாபகம் வரும்.
I think it was our Maestro's tribute to another Master.
https://www.youtube.com/watch?v=fPsJxcMUIYM