மாலினி ஓலாவிற்கு பணம் கொடுத்து விட்டு தன் அமெரிக்கன் டூரிஸ்டருடன் சென்னை ஏர்போர்ட்டில் நுழைந்தாள். வெப் செக்கின் செய்திருந்ததால் கியூவில் நிற்காமல் லக்கேஜ் மட்டும் செக்கின் செய்துவிட்டு நேராக லவுஞ்சுக்கு சென்றாள். id யில் மொறுமொறு மெதுவடை ஒன்றேயொன்று சாப்பிடலாமா என்ற சபலத்தை அடக்கிக்கொண்டாள். எப்படியும் பிசினெஸ் கிளாசில் ஏதாவது கொடுத்துக்கொண்டே தான் இருப்பார்கள் என்று சமாதானப் படுத்திக்கொண்டாள்.
எமிரேட்ஸ் விமானம் துபாய் செல்லும் பயணிகளை அழைத்தது. விமானத்தின் உள்ளே சென்று தன் ஹாண்ட் லக்கேஜை வைக்க சற்று சிரமப்பட்டாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரவி சட்டென்று எழுந்து உதவினான். ஒரு புன்னகை பூத்தாள். பதிலேதும் சொல்லவில்லை.
பேச்சை ஆரம்பிக்க தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
"ஹாய் ஆம் ரவி. "
"ஹாய்.. அம் மாலினி"
"விஜய் டிவியில் வாய்ஸ் டிரைனரா இருக்கேன்.. நீங்க?"
"ஐ அம் எ மாடல்"
"நான் கொஞ்சம் டியூப்லைட்.. உங்க உயரத்தையும், அழகையும் பார்த்து நானே கெஸ் பண்ணிருக்கணும்.. என் வேலையை மாத்தி சொல்லலாமா?"
மாலினி பெரிய ஜோக் கேட்டது போல சிரித்தாள்.
"மாடலிங்.. கேட்வாக்கா இல்ல ஃபேஷனா?"
"இரண்டும் பண்ணுவேன்.."
"துபாயில் பேஷன் ஷோன்னா புர்கா போட்டுக்கிட்டு தான் மாடல்ஸ் வருவாங்களா?"
இதற்கும் வாய்விட்டு சிரித்தாள்..
"நான் வெக்கேஷனுக்கு தான் போறேன்"
"நான் கூட.. காம்ப்ளிமென்டரி டூர் தான்"
நிறைய உளறிவிட்டோம் என்று உணர்ந்து கொஞ்சம் அமைதியானான்.
விமானம் கிளம்பும் முன் பைலட் ஏதோ பேசினார். யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. காது அடைக்காமல் இருக்க புளிப்பு மிட்டாய் கொடுத்தார்கள். அதை சில பேர் மட்டும் வாயில் போட்டுக்கொண்டார்கள்.
விமானம் கிளம்பி சிறிது நேரம் கழித்து சீட் பெல்ட்டை கழட்டிக்கொள்ளலாம்..லேப்டாப்பில் வேலை செய்யலாம் என்று பணிப்பெண் சொன்னதும் தான் பாதி பேருக்கு உயிர் வந்தது..
ரவி மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான்..
"உங்கள் வேலை எப்படியென்று தெரியவில்லை..ஆனால் என் வேலை சரியான ரோதனை..கண்டவன் எல்லாம் பாட்டு பாடறேன்னு வந்து உயிரை வாங்குவானுங்க.. அவனுக்கு வாய்ஸ் ட்ரைனிங் கொடுக்றதுக்குள்ள நம்ம குரல் கெட்டு போயிடும்"
"எனக்கு ஒரு பாய்பிரென்ட் இருந்தான்..முகுந்த்.. அவனுக்கு எப்படியாவது சூப்பர் சிங்கர்ல ஜெயிக்கணும்னு ரொம்ப ஆசை"
"எனக்கு கூட முகுந்த் னு ஒரு பையனை தெரியும். 2-3 வருஷத்துக்கு முன்னாடி வாய்ஸ் டெஸ்ட்டிங்க்கு வந்திருந்தான்.. ஆனா உங்க பிரெண்டு மாதிரி இல்ல. கண்ராவியான குரல்.. பேசும் போது நல்ல டிம்பர்.. ஆனா பாடினான்னா கர்ண கொடூரம்.. கொஞ்சம் ட்ரை பண்ணேன்.. முடியல.. நல்லா திட்டி விட்டுட்டேன்..அன்னைக்கு போனவன் தான் .. அப்புறம் அவனை பார்க்கவே இல்ல.."
"அன்னிக்கு எவ்ளோ அழுதான் தெரியுமா?"
ரவி அதிர்ச்சியானான்..
"அப்படின்னா..?"
"ஆமாம்.. அதே முகுந்த் தான்.. ரொம்ப அப்செட்டா இருந்தான் 2 மாசத்துக்கு. அவனோட லைஃப்டைம் ஆம்பிஷனே அதான்."
"சாரி..உங்க கிட்டேயே.."
"இட்ஸ் ஓகே..வி ஆர் நோ மோர் சீயிங் ஈச் அதர்"
"ஏங்க.. என்னாச்சு?"
"அவன் ரொம்ப சென்சிடிவ்.. ஒரு தடவை அவனோட பிரென்ட் ஹரியோடு என்னை மால் ல பார்த்தான்.. அதுக்கப்புறம் சரியா பேசல.. கொஞ்ச நாள் கழிச்சு ஊரை விட்டே போயிட்டான்.. காண்டாக்டே இல்ல அப்புறம்."
"ஹே மாலினி.. வாட் எ சர்ப்ரைஸ்.." குரல் கேட்டு திரும்பினாள் மாலினி..
"ஹே ஹரி.. எப்படியா இருக்க? எவ்வளோ நாளாச்சு பார்த்து.. ஸ்டில் இன் சென்னை?"
"வெரி மச் யா.. நீ அப்படியே இருக்க.. நாட் அன் அவுன்ஸ் மோர்.."
"தேங்க்ஸ் யா .. திஸ் இஸ் ரவி. முகுந்த் பத்தி பேசிட்டு இருந்தோம்.."
"ஓ..அவனா.. சரியான சைக்கோ.. வாழ்க்கையில எதையும் லைட்டா எடுத்துக்க தெரியாத முட்டாள்.. ஸ்கூல் டேஸ் ல இருந்தே அவன் அப்படித்தான்"
இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை அவ்வப்பொழுது திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு வயதான மாமி.. திடீரென்று ஞாபகம் வந்தவராய் "நீ ஹரி தானே.. என்னை தெரியறதா.. வசந்தா மிஸ்.." என்றார்.
"வாவ்.. ஹௌ ஆர் யு மேடம் ? இன்னைக்கு என்ன சர்ப்ரைஸ் தினமா? பார்த்து பல வருஷம் ஆன எல்லோரும் காட்சி கொடுக்கறீங்க.. இட்ஸ் ரியலி வியர்ட் மேன்.. ஐ மீன் லேடீஸ்.."
"நீங்க எல்லோரும் என் கிளாஸ் ல படிச்சானே அந்த முகுந்தை பத்தியா பேசிண்டு இருந்தீங்க?"
"ஆமாம் மேடம்.. ஏன் கேக்கறீங்க?"
"இல்ல.. ஒரு வருஷம் தான் அவன் என் கிளாஸ் ஸ்டுடென்ட்டா இருந்தான்..அப்புறம் செக்ஷன் மாறிட்டான்.. ஒரு தடவை மேத்ஸ் புரியலேன்னு சொன்னான்.. 4, 5 தடவை சொல்லிக்கொடுத்தும் புரியலேன்னு சொன்னான். கோவத்துல திட்டிட்டேன்.. அடுத்த நாள் கையிலே ப்ளேடால வெட்டிண்டுட்டான்.. பெரிய பிரச்னை ஆச்சு.. இட் வாஸ் எ நைட்மேர் இயர்.."
"ஆமாம் மேடம்.. எனக்கு ஞாபகம் இருக்கு.. இன்னொரு தடவை ரன்னிங் ரேஸுல தன்னை ஜெயிச்சுட்டான்னு வெங்கட்டை கருங்கல்லை வச்சு மண்டையை உடைச்சுட்டான்.. கார்த்திக் னு ஒரு பையன் கூட எப்பவும் சண்டை..அவன் முகுந்தை கிண்டல் செஞ்சுக்கிட்டே இருப்பான்."
கார்த்திக் என்ற தன் பெயரைக் கேட்டு அவன் திரும்பினான்.. அவனுக்கு ஒரே ஆச்சரியம்.. பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படித்த ஹரி மற்றும் வசந்தா மேடம் இவர்களை இவ்வளவு வருஷம் கழித்து பார்ப்பதில் அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை..
"எப்படி டா இருக்க ஹரி.. மிஸ் நான் தான் கார்த்திக்.. ஞாபகம் இருக்கா"
அனைவருக்கும் ஆச்சரியம்.. ஆனால் ரவிக்கு ஏதோ உறுத்தியது..
ஒருவர் எதேச்சையாக சந்தித்தால் COINCIDENCE என்று சொல்லலாம்..இப்படி நான்கைந்து பேர் பல வருடம் கழித்து ஒரே விமானத்தில்..
அவன் முகம் மாறுவதை எல்லோருமே கவனித்தனர்..
"என்ன விஷயம்?" என்றாள் மாலினி.
"நீங்க எல்லோரும் எப்படி இந்த பிளைட் புக் பண்ணீங்க? "
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. "நான் புக் பண்ணவில்லை.. என்னோட கார்டு கம்பெனி ஃபிரீயா கொடுத்தது " என்றான் ஹரி..
மற்றவர்களும் தங்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கவில்லை என்பது தெரிந்தது.. ரவி யோசித்தான்.. கொஞ்சம் குரலை உயர்த்தி மற்ற பயணிகளிடம் கேட்டான்.."இங்கே இருப்பவர்கள் எத்தனை பேருக்கு முகுந்த் என்பவரைத் தெரியும்.. "
சற்று நேரம் கழித்து ஒரு 25- 30 பேர் கையை உயர்த்தினர்..
"நீங்கள் யாரும் நீங்களாக பிளையிட் டிக்கெட் புக் செய்யவில்லையா?"
கையை உயர்த்திய அனைவரும் பீதியுடன் தலையசைத்தார்கள்..
ஸ்பீக்கரில் பைலட்டின் குரல் ஒலித்தது.. இந்த முறை அனைவரும் அதை உற்றுக் கேட்டனர்.
"திஸ் இஸ் யுவர் கேப்டன் முகுந்த் ஸ்பீக்கிங்... மை கோ பைலட் இஸ் டெட்.."
அந்த விமானம் அரபிக்கடலை நோக்கி வேகமாக இறங்கிக்கொண்டிருந்தது .
(என்னுடைய முதல் கதை எழுதும் முயற்சி.. ஒரு பிரெஞ்சு குறும்படத்தை தழுவி எழுதியது.)
- நாராயணன் ஸ்வாமிநாதன்